நான், கிடைச்ச சான்ஸ மிஸ் பண்ணக்கூடாதுனு
”ஹாய் டூ யூ ரெமெம்பெர் மீ ?” னு
அவளைப் பார்த்துக் கேட்டென் அவள்… “ஸாரீ ஐ டோன்ட் நோ..” னு சொல்லிட்டு
நிக்காம வீர்ர்ரு னு போய்ட்டா…. ம்ம்ம் சே பேசாமலே இருந்துருக்கலாம் செம்ம மூட் ஔட்.. ஃபீல்லாகி முடிக்குமுன் என்னோட வந்தவர் “கம் ஆன் கதிர் லெட்ஸ் மூவ், இட்ஸ் டைம் டு அட்டேண்ட் த இன்டக்சன் ப்ரொக்ரம் “னு சொல்லி கூட்டிட்டு போனார்…
ம்ம்ம்ம் ஏதோ அஞ்சு, ஆறு ஃபார்ம்ஸ் கொடுத்து கையெழுத்து வாங்குநாங்க,
ஹெச்ஆர் பொண்ணு ஒண்ணு தம் கட்டி கம்பனியோட வரலாறு, பூவியல் எல்லாம்
சொல்லிக்கிட்டு இருந்துது.. அது பேசுறதத கேட்க மனம் இல்லாம அவள் எங்க உட்கார்ந்து இருக்கானு கண்ணு அனிச்சையாய் தேட ஆரம்பித்தது. அவ நான் உட்கார்ந்துதிருந்த வரிசைக்கு 2 வரிசை முன்னாடி , சற்று க்ராஸ்ஸா உட்கார்ந்திருந்தா.. ரொம்ப ஸீரீயஸ ஹேச்ஆர் பேசுறத கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கேட்டுக்கிட்டுருந்தா..அப்படி ஒரு பீளிங்கா?! எனக்கு பாய்ஸ் பட வசனம்தான் நியாபகம் வந்துச்சு.. ம்ம்ம்…
யாரோ தன்னை பார்க்கிறத உணர்ந்து கண்களை ஃபுல்லா லெஃப்ட் ஸைட் திருப்பி சுப்ரமணியபுரம் ஸ்வாதீ மாதிரி பார்த்தா…நானும் அவளைப் பார்த்து ஒரு
புன்முறுவலை உதிர்த்தேன்…. லைட்டா அவளும் சிரிச்சா.. என்னால நம்பவே முடியல.. எனக்கு பின்னாடி யாரையாவது பார்த்து சிரிக்கிறாலோனு திரும்பி பார்த்தேன்… என் பின்னாடி யாரும் இல்ல
ஏன்னா நான் உட்கார்ந்திருந்த வரிசைதான் கடைசி வரிசை…. “அடிப்பாவி காலைல என்ன தெரியாதுனு சொன்னவ இப்போ என்ன பார்த்து சிரிக்கிறா?!”. ஏன் இப்படி இரட்டை வேசம் போடுறா?” இது இவள் குணமா அல்லது பெண்களின் குல குணமா?!”.
ஒவ்வொரு அழகானப் பெண்ணையும்
முதல் முறை பார்க்கும் போதும் -
அப்பெண் மீது எழும் ஈர்ப்பு அல்ல இது
உன்னிடம் மட்டுமே வரும் காதல் இது!!! கவிதை கவிதை “இதை அப்படியே அவளிடம் சொல்லலாமா?” – “ஓகே என்ன ஆனாலும் சரி மதியம் சாப்பிடும் போது எப்படியாவது பேசி அவ நம்பர் வாங்கிடனும் ” னு என் மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டேன்.
ஹெச் ஆர் ஸ்பீச் முடிஞ்சுது, டைம் கரெக்டா 11:30… ஒரு 15 நிமிடம் இடைவேளை விட்டானுங்க, ஓகே இப்பவே பேசலாம்னு அவளை தேடுனா அவ எஸ்கேப் எங்க போனானே தெரியல… கரெக்டா 11:40 க்கு மீட்டிங் ஹால்கிட்ட வந்தா ஆனா யார் கூட வோ ஃபோ ன் பேசிக்கிட்டு இருந்தா…
11 : 45 அடுத்த செசன் ஆரம்பமானது, இந்த செசன் என் வாழ்க்கையில பெரிய தொடக்கத்த ஏற்படுதும்னு நான் நினைககல… ஆமாங்க இந்த செசன்ல தான் எனக்கு எந்த டெக்னாலஜினு சொன்னாங்க…எனக்கு ஒரே ஆறுதல் நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்ட மாதிரியே .நேட் / ஜாவா ரெண்டும் இல்லாம
வேற ஒரு புது டெக்னாலஜில போட்டாங்க.. அவளும் என் டெக்னாலஜிதான்னு நினைச்சேன் பட் அவளுக்கு வேற டெக்னாலஜி…
August 25, 2010 at 2:12 am |
.நெட் மேல அப்படி என்ன கோவம்… அதால தான்பா எங்க வண்டி ஓடிக்கொண்டு இறுக்கு….
மீண்டும் ஒரு அருமையான பகுதி…
August 25, 2010 at 7:10 am |
Thanks Arun
கோபம்லாம் கிடையாது.
. dotnet கதிருக்கு தெரியாது so அதுனால பயம் !!!
August 25, 2010 at 7:36 am |
[...] முதல் பேச்சிலே By senthyl அன்பரே இந்தப்பதிவு இதன் தொடர்ச்சியே [...]