முதல் பேச்சிலே

அன்பரே இந்தப்பதிவு இதன் தொடர்ச்சியே

அப்படி இப்படின்னு சாப்பாட்டு நேரம் வந்துடுச்சு. நேரம் : 12 : 45 . ஒரு வழியா அன்றைக்கு வந்த அனைவரையும்  ஆளுக்கொரு technologyல allocate பண்ணிட்டாங்க.  ஒருத்தர் எல்லாருக்கும் ஒரு துண்டு சீட் கொடுத்துக்கிட்டு வந்தார், எனக்கும் ஒண்ணு கொடுத்தார். அதை வாங்கி பார்‌த்ததுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுது அது சாப்பாட்டு Tokenனு.

HR “Okay guys think you all got your food token! Please go have your lunch and lets meet again after 45 minutes…”. சொன்னதுதான் தாமதம் எல்லாம் canteen எங்கணு பறக்க ஆரம்பிசாங்க….  ஆனா நான் மட்டும் அவள் எங்க இருக்கானு சுத்தி முத்தி பார்த்தேன்… அப்போ பின்னாடி இருந்து ஒரு குரல்.. “Hai….” 

 திரும்பி பார்த்தா அட நம்பவே முடியல , அவள்தான் வாய் திறக்காது புன்னகையை உதடுகளில் குவித்து என்னை பார்த்து நின்றாள்… நான் நொடி இறந்து மீண்டும் பிறந்து, “Oh Hai.. am just looking for yu…Yuvi… my friend..”  சமாளிச்சேன், அவள்.. ”Oh fine.. thought of joining u for the lunch” “அட லூசு அவளே சாப்பிட கூப்பிடும் போது ஏண்டா சொதப்புற “னு எனக்குள்ளேயே சொல்லிக்கிட்டு…. “Hey i will join you.. think he has gone to meet his friend who is working in this office.. he already told about this….” “சபாஷ்” நான் எனக்கு நானே மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்!  இரண்டு பேரும் Canteen  போய்ச் சேர்ந்தோம்.. கையில் இருந்த tokena கொடுத்து , வரிசைல நின்னு தட்டு ஏந்தி சாப்பாடு வாங்கி ஒரு table புடிச்சி உட்காரத்துக்குள்ள அப்பாடானு ஆகிடுச்சு… நடக்கரதெல்லாம் ஏதோ கனவு மாதிரி இருந்துச்சு… heart-beat வேற ஏகத்துக்கு அடிக்க ஆரம்பிச்சது..  கட கடன்னு தண்ணிய குடிச்சிட்டு. throat-ah Clear பண்ணிட்டு… நானே பேச ஆரம்பிச்சேன்…

So u do remember me? rite?”

“Yes, i do remember you but i was bit tensed and i didnt recognize u this morning..”

“Its okay.. am happy that u recognized me now.. am Kathir..”

“am Swetha… ”

“R u from bangalore? “

“No am from chennai only..”

“So u know Thamizh rite?”

“Ofcourse…”

Ofcourse…?! Ofcourse தமிழ் இல்லையே…!”

“ஆமாம் தமிழ் இல்லைதான் ”
“யப்பா.! தமிழ் நல்லா பேசுறீங்க.. ”
“Halloh சும்மா ஓட்டாதீங்க, நான் சாதாரணாமா-தான் பேசுறேன்… ”
இல்லங்க உங்க voice நல்லா sweet-ah உங்கள மாதிரியே இருக்கு ”
“ஹோ …”னு சொல்லிட்டு உதட்டை வாயினுள் மடக்கிச் சிரித்தால்…                     

 “அட.. ஆமாங்க . சரி நீங்க எந்த ஏரியால இருந்து வரீங்க ?”
“நான் அசோக் பில்லர் கிட்ட இருந்து வரேன்.. நீங்க? “                                                            

“நான் கிண்டில இருந்து வரேன்”..

 
“இல்லங்க…. தஞ்சாவூர் ! உங்க native?”

“உங்க native சென்னையா? ”

 
“Okay”
பேச்சுக்கு சின்ன break விட்டுட்டு , அமைதியா இருந்தோம்.
எதாவது கேட்கலாம்னு யோசிச்சிக்கிட்டே சாப்பிடும் போது ,அவளே
ஒரு கேள்வி கேட்டா….

“எனக்கு சென்னை தான்..”

“Are you staying with your friends?”

“Yes…”

“Jolliana Life!”

“என்னங்க  ஜாலி ?! Everything has its own happiness….!”.                                                            

  “ம்ம்… சாப்பாடெல்லாம் hotelதானா? இல்ல cook பண்றீங்களா? ”
“Cookingஹா ஒரு தடவ try பண்ணிட்டு விட்டுட்டோம்.. hotelதான்…”

காலையில சாப்பிடாததுனால வேகமா சாப்பிட்டு முடிச்சிட்டேன் . அவ பாதி
plate கூட முடிக்கல..

“Okay am done.. lets start” னு சொல்லிட்டு தட்ட எடுத்துட்டு எழுந்தா…
என்னங்க பாதி சாப்பாடு அப்படியே இருக்கு.. போதுமாங்க சாப்பாடு ?”
“போதும் கதிர்… am done..”

திரும்ப meeting hall-க்கு வந்தோம்… எங்கள 12:45 வரச்சொல்லிட்டு , 1:00 pmக்கு தான்  HR வந்தாங்க… “Welcome again people.. hope you all had a good lunch. Our company has tie-up with these banks and you can opt any one bank to open a salary account.. Now the each representative from different bank will give a brief introduction about their bank and the attractive plans they offer… ” ஹா ஒவ்வொரு Bankலெர்ந்து வந்தவங்கலும்  அவங்க அவங்க bankஹ பத்தி
என்னன்னவோ சொன்னாங்க, நான் என் friendகிட்ட எது நல்ல bankகுனு  கேட்டு வச்சிருந்தேன். so அந்த bankலயே account open பண்ணினேன். அவ எந்த bank opt பண்றதுணு கொஞ்சம் குழம்பி இருக்கானு தெரிஞ்சது..

“என்னங்க எந்த bank  choose பண்றதுணு confusion-னா இருக்கா?”
“Yes கதிர் ”
“உங்களுக்கு Ok-னா நான் account open பண்ண bank-லையே  நீங்களும் account open 
பண்ணலாம். “
                                                                                                                                               

 “ஓகே கதிர் நானும் நீங்க account open பண்ண bank-லையே நானும் account open பண்றேன் “…
ஒரு வழியா எல்லா formality-யும் முடிஞ்சு நாளை முதல் office name சொல்லி  இந்த Office-ல report பண்ணுங்கனு சொல்லிட்டு அந்த HR கிளம்பிட்டாங்க…. அடுத்த நாள் எந்த    bus-னு பார்த்து குறிச்சுக்கிட்டு கிளம்பலாம்-னு பார்த்தா அவளுக்கும் எனக்கும் ஒரே bus…
சரி அவள் கிட்ட எப்படி phone number கேட்கலாம்னு யோசிச்சா…
“கதிர் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே ரூட் தான்… உங்க Mobile நம்பர் சொல்லுங்க suppose நான் bus-ஸ miss பண்ணா உங்களுக்கு call பண்ணி தெரிஞ்சுக்கலாம்..”
அட நானும் இதுக்காகத்தான் உங்க நம்பர் வாங்கணும்னு நினைச்சேன்… உங்க நம்பர் சொல்லுங்க நான் Missed call கொடுக்குறேன்….”

மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம் .. யாரோ என்ன பார்த்து இப்படிச் சொன்னது கேட்டுச்சு…

 ”டேய் அவ நம்பர்தாண்டா கிடைச்சிருக்கு.. என்னவோ
அவளே  கிடைச்ச மாதிரி  ரொம்ப சந்தோசப்படாத….”

கதைகள் முதல்பக்கம்

Advertisement

Tags: , , ,

3 Responses to “முதல் பேச்சிலே”

  1. Arun Says:

    Waiting for the next part……

  2. புதிய தொடக்கம் « Senthyl Says:

    [...] Senthyl -am juz de travelling soldier « முதல் பேச்சிலே [...]

  3. senthyl Says:

    Thanks Arun :) ve posted de nxt one

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.