புதிய தொடக்கம்

 அன்பரே இந்தப்பதிவு இதன் தொடர்ச்சியே

Evening Room-க்கு வந்தவுடன், நண்பர்கள் எல்லாம் ஒருத்தன் மாற்றி ஒருத்தன்  ஒவ்வொரு கேள்விய கேட்டு முடிசாங்க, நானும் அவனுங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னேன்.  அதுவரை சும்மா இருந்த குமார் முக்கியமான கேள்விய கேட்டான் . 

“மச்சி Figure-லாம் எப்படிடா?  எதாவது Correct ஆச்சா?”

“எல்லாம் சுமார்தான் மச்சி அவ ஒருத்திய தவற… டேய் நான் interview போனப்போ ஒரு பொண்ண பார்த்தேன்னு சொன்னேன்ல..”

“ஆமாம் அவளை இன்னைக்கும் பார்த்தியா ?”

“ஆமாம் மச்சி. அவளும் நம்ம Year passed out தான் , என் கூடத்தான் அவளும் Join பண்ணா…”

“சூப்பர் அவகிட்ட பேசுனியா? ”

“ம்ம்ம் பேசுனன்டா… first என்ன தெரியாதுன்னா.. அப்பறம் அவளாவே வந்து பேசுனா….”

“அப்படிபோடு , அவ பெயர் என்னா? எங்கிருந்து வர்றா?”

“பெயர் சுவேதா , அசோக் நகர்ல இருந்து வர்றா… செம்மடா அவ “

“ஆகா நம்மாளு ஒருத்தன் காதல்ல விழுந்துட்டாண்டா… ”

“டேய் டேய் சும்மா இன்னைக்குத்தான் பேசவே ஆரம்பிச்சிருக்கேன் அதுக்குள்ள லவ் கிவுனு , அவளை பார்த்தா அப்படி தெரியலாடா..”

“மச்சி எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும்..  அப்பறம் என்ன பேசுனீங்க? ”

“சும்மாடா பெருசா ஒன்னும் பேசல… just அறிமுகமாகிட்டோம்.. அவ்வளவுதான்..!”

“அவ்வளவுதானா? atleast அவள் phone numberஆச்சும் வாங்குனியா? ”

“ம்ம்ம் வாங்கிட்டேன். அதுவும் அவளே தான் கேட்டா.. ஏன்னா எங்க ரெண்டு பேருக்கும் ஒரே route , அதனால அவ bus  பத்தி update கேட்க உதவும்னு என் நம்பர கேட்டு வாங்கிக்கிட்டா… ”

“அப்படிபோடு அவளே வந்து பேசுறா , அவளே வந்து நம்பர் தர்றா..ஹ்ம்ம் மச்சக்காரண்டா நீ…”

பேசிக்கிட்டுருக்கும் போதே அவள் கிட்ட இருந்து sms வந்தது….நல்ல வேலையா TVல பொங்கல் நிகழ்ச்சிகள் என்னன்னனு போட ஆரம்பிச்சான், நான் Silenta cell எடுத்துக்கிட்டு S ஆனேன்..!

“Hai Kathir our bus route number is 001 rite?”

“அடிப்பாவி” –  இப்படி ஒரு மொக்க கேள்வி கேட்டு sms வரும்னு எதிர்பார்கல.. ஹ்ம்ம் நான் எப்படியும் மறந்துடுவேன்னு noteல எழுதி வெச்சிருந்தத எடுத்து பார்த்தேன்.. அவ சொன்ன route நம்பர் தான்….

“Yes u r rite” னு நான் reply அனுப்பினேன். அவள் ஏதேனும் கேட்டு sms அனுப்புவான்னு cell-லையே பார்துக்கிட்டுருந்தேன்..10 நிமிஷம் ஓடிடுச்சு, ஒரு sms வந்தது…

“Had ur dinner?”

“Yes .. Did u ? “

“hmmm.. wat u doing?”

“Just replyin to ur message… “

“Oh come on Kathir.. ”

Jus chatting with ma roommates…”

“r they ur college mates? ”

“S dey are ma PG mates… “

“oh are u a Post – Graduate?! wots ur qualification? ”

“MCA.. urs ? “

“Fine. B.E”

B.E in ?”

“ICE – Instrumentation and Control Engineering”

“wat u doing ?”

“nothing great.. am bit tired…. ”

“okay take rest… will c u tomoro…”

“y kathir ? r u gonna sleep now?”

“No. u said ur tired.. tats  y i jus wanna drop myself … “

“am not that much tired, can talk for some more time..”

“About?”

“about?! u tell something…”

“huh.. is this ur first job?”

“Yeah…… i was doing a network course at NiiT.. but i didn’t complete it…”

“y u didnt complete it?”

“I got this new offer , so i didnt continue that course. wat abt u?”

“Yes this is ma first job.. past 6 months was doing nothing other than searching a job “

சரி முதல் நாளே ரொம்ப நேரம் பேசுனா ஏதும் தப்பா நினைச்சுக்கப் போறான்னு ”Good night “னு சொல்லி முடிக்கலாம்னு…

“okay its already 11, will c u tomoro…Gud Nyt… Sweet Dreams” னு message அனுப்பிச்சேன்.. அவளும் பதிலுக்கு “Good night Kathir. TC.” னு message அனுப்பினா.

அப்பாடா எங்க அவ இன்னும் conversationனை இழுத்துடுவாளோனு நினைச்சேன்….

என்னான்னே தெரியல  கொஞ்ச நேரம் தூக்கமே வரல ஒருமாதிரி சிரிச்சிக்கிட்டே படுத்திருந்தேன்.. இதையும்

குமார் பார்த்துட்டான் “ஆஹா ஆரம்பிச்சிடிச்சாடா உனக்கும்..”

“டேய் சும்மா தூங்குடா” னு சொல்லிட்டு நான் போர்வையை முகம்வரை மூடி உறங்கிவிட்டேன்.

மறுநாள், என்றைக்கும் அலாரம் அடித்தும் எழமனமில்லாது உறங்கும் நான் அன்று அலாரம் அடிக்குமுன் எழுந்து officeக்கு கிளம்பினேன். மனசுல ஏதோ ஒரு சந்தோசம், உற்சாகம்.. புதுசா ரிலீஸ் ஆனா தலைவர் படம் பார்க்க போற மாதிரி அப்படி ஒரு மகிழ்ச்சி… வீட்டு வாசற்படியவிட்டு இறங்கியுடனே கை தானா செல்ல

எடுத்து அவள் number-ah dial செய்ய ஆரம்பிச்சது.. ring அடிக்க ஆரம்பிச்சிது மனசு பட படனு அடிக்க ஆரம்பிச்சது!

என்னவோ என் call-க்கு காத்துக்கிடந்தது போல ரெண்டாவது ring-லையே phone-ன attend பண்ணா.

“Good Morning கதிர் சொல்லுங்க..” 

“Good Morning சுவேதா.. bus  வந்துடுச்சா?”

“இல்லை கதிர். நான் இப்போதான் bus stopக்கு வந்தேன்.. bus இங்க வந்தோனே உங்களுக்கு inform பண்றேன்..”

“oh thanks சுவேதா… busல பார்க்கலாம்…”

” Ok கதிர்” …

இப்போ படத்துக்கு டிக்கெட் கிடைச்ச சந்தோசம்.. அடுத்த 2 நிமிசத்துல அவகிட்டேருந்து sms வந்துச்சு…

“Hi  bus has come to my stopping  ”

“Fine . Thanks “

message வந்து ஒரு 5  நிமிஷம் இருக்கும் , bus என் stopping க்கு வந்தது… bus – ல ஏறியவுடன் அவள் எங்கு இருக்கிறாள்னு தேடின என் விழிகள்…….. பார்த்த அவள் bus ல last  but one seat ல இருந்து கையை உயர்த்தி தன் அருகில் காலியாக இருக்கும் இருக்கைக்கு அழைத்தாள்…!

கதைகள் முதல்பக்கம்

 

Advertisement

Tags: , , , ,

One Response to “புதிய தொடக்கம்”

  1. மனதை படித்தாள் « Senthyl Says:

    [...] அன்பரே இந்தப்பதிவு இதன் தொடர்ச்சியே [...]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.